முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் தேர்தல் வெற்றி: சரத்குமார் வாழ்த்து

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.22 - சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் எம்எல்.ஏ. வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்தசட்டமன்றப் பொதுத்தற்போது 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிருக்கும் வெற்றி முதலமைச்சர் தலைமையில் நடந்துவரும் நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்குவதாக அமைந்துள்ளது என்பதே சாலப் பொருந்தும்.

எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் மொத்தமாகப் பெற்ற வாக்குகளைவிட அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற்றிருப்பதும், கடந்த தேர்தல் போட்டியிடாமல் சொந்த மண்ணில் செல்வாக்கை நிலைநாட்டப் போவதாகக் கூறி தற்போது தனித்துப் போட்டியிட்டு மூன்றாமிடத்திற்கு ம.தி.மு.க. தள்ளப்பட்டிருப்பதும், கடந்த தேர்தல் அ.இ.அ.தி.மு.க. வோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்று, பின்னர் தன்னால்தான் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்று இறுமாப்பு பேசி, சவால்விட்டு போட்டியிட்ட தே.மு.தி.க. டெபாசிட் இழந்து நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் மட்டுமல்லாது நடந்து முடிந்த இடைத்தேர்தலும் அ.இ.அ.தி.மு.க. அலைதான் வீடியுள்ளது என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல் பெற்ற வாக்குகளைவிட சுமார் 35,000 வாக்குகள் குறைவாகப் பெற்று, டெபாசிட்டையும் இழந்து நிற்கும் தி.மு.க.-வை மக்கள் புறக்கணித்திருப்பதையும் தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன.

தே.மு.தி.க. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியோடு 12144 ஒட்டுகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளது.

சங்கரன்கோவில் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெறச்செய்த வாக்காளப் பெருமக்களுக்கு ச.ம.க. சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் வெற்றி பெற்ற முத்துச் செல்விக்கு என நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, இந்த சிறப்பு மிக்க வெற்றிக்கு மூலாதாரமாக நல்லாட்சி நல்கி, தமிழக மக்களின் நம்பக்கைக்கு பாத்திரமாகத் திகழும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், இத்தேர்தல் அயராது உழைத்திட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது அயராது உழைத்திட்ட அ.இ.அ.தி.மு.க., சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்