முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது ஒரு நாள்: ஆஸ்திரேலியா - மே.இ.தீவுகள் ஆட்டம் டிரா

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கிங்ஸ்டன், மார்ச். 22 - மேற்கு இந்தியத் தீவுகள் அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கிங்ஸ்டனில் நடந்த 3 - வது ஒரு நாள் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், பெய்லி மற்றும் மைக் ஹஸ் சே இருவரும் அரை சதம் அடித்தனர். மே.இ.தீவு சார்பில் சார்லஸ் 45 ரன்னு ம், பொல்லார்டு 36 ரன்னும், ரஸ்செல் 37 ரன்னும், பாக் 33 ரன்னும் எடுத்தனர். பெளலிங்கின் போது, மே.இ.தீவு தரப் பில் நரைன் 3 விக்கெட்டும், சாமுவே ல்ஸ் மற்றும் ரோச் தலா 2 விக்கெட்டு ம் எடுத்தனர். ஆஸி. சார்பில், வாட்சன் 3 விக்கெட்டும், மெக்கே மற்றும் டொகெர்டி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 

கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமை யிலான ஆஸ்திரேலிய அணி மே.இ.தீ வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

மே.இ.தீவு மற்றும் ஆஸி. அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்ட து. இதன் 3 -வது போட்டி கிங்ஸ்டனில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் தற்காலிக கேப்டன் வாட்சன் மற்றும் வார்னர் இருவரும் ஆட்டத்தை துவக்கி னர். 

ஆஸ்திரேலிய அணி இறுதியில் நிர்ண யிக்கப்பட்ட 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 220 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்க ள் அரை சதமும், ஒருவர் கால் சதமும் அடித்தனர். 

மூத்த வீரரான மைக் ஹஸ்சே அதிகபட்சமாக, 95 பந்தில் 67 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். இறுதியில் அவர் சாமுவேல்ஸ் வீசிய பந்தில் கீப்பர் பாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

பெய்லி 87 பந்தில் 59 ரன்னை எடுத்தா ர். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, துவக்க வீரர் வார்னர் 51 பந்தில் 37 ரன்னையும், டி.ஹஸ்சே 15 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி தரப்பில், நரைன் 32 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். சாமுவேல்ஸ் மற்றும் ரோச் தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, சம்மி 1 விக்கெட் எடுத்தார். 

மே.இ.தீவு அணி 221 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 220 ரன்னை எடுத்தது. 

இரு அணிகளும் சமமான ஸ்கோரை எடுத்ததால் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என்ற கண க்கில் உள்ளது. 

மே.இ.தீவு அணி சார்பில், துவக்க வீரர் சார்லஸ் 56 பந்தில் 45 ரன்னையும், பொல்லார்டு 43 பந்தில் 36 ரன்னையும், கீப்பர் பாக். 33 ரன்னையும், ரஸ்செல் 36 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், வாட்சன் 30 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். மெக்கே மற்றும் டொகெர்டி தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, பிர ட்லீ மற்றும் லியான் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மைக் ஹஸ்சே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்