முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் தப்பிய மத்திய காங். அரசு

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 22 - தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைப்பதற்கு எதிராக பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் ராஜ்யசபாவில் கொண்டு வந்த திருத்த மசோதாக்களை நிராகரிக்க சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு உதவியுள்ளன. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த அறிவிப்புக்கு எதிராக பா.ஜ.க. திருத்த தீர்மானங்களை தாக்கல் செய்தது. அதே போல வாசுதேவ் ஆச்சார்யா(இடது கம்யூனிஸ்டு), குருதாஸ் குப்தா(வலது கம்யூனிஸ்டு), பாத்ருகாரி(பிஜூ ஜனதா தளம்) உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இதனை வழிமொழிந்தனர். இதன் மீதான விவாதத்துக்குப் பின் பிரதமர் மன்மோகன்சிங் பதிலளித்து பேசிய பின் ஓட்டெடுப்பு நடந்தது. 

மத்திய அரசுக்கு ஆதரவாக 105 ஓட்டுகளும், எதிராக 83 ஓட்டுகளும் கிடைத்ததால் இந்த தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டன. இதனால் அரசு தப்பியது. சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியுமே மத்திய அரசின் இந்த வெற்றிக்கு காரணமாகும். இந்த வாக்கெடுப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. இந்த தீர்மானம் வென்றிருந்தாலும் மத்திய அரசு பதவி விலக தேவையில்லை என்றாலும் அது அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதன் மூலம் அரசு முதல் தடையை தாண்டி விட்டது. இன்னமும் ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் நிறைவேறியாக வேண்டும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரஸ் கையில் இருக்கும் போது இந்த சிக்கலில் இருந்து மத்திய அரசு தப்பி விடும் என்றே தோன்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்