கதைக்காக நிர்வாணமாக நடித்தேன்: நடிகை சரண்யா

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை ,மார்ச் .22 - கதைக்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன் என்று நடிகை சரண்யாநாக் கூறினார். தமிழ்படத்தில் நிர்வாணமாக நடித்த சரண்யா நாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நான் தற்போது மழைக்காலம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறேன். இப்படத்தை தீபன் என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் கதைப்படி நிர்வாணமாக நடிக்க வேண்டிய ஒரு காட்சி வருகிறது. அதில் நடிக்கும் படி கேட்டார்கள்.

ஸ்கின் டிரஸ் (உடலை தழுவும் மெல்லிய ஆடை) போட்டு நடித்தேன். கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடிக்க வேண்டியதாகி விட்டது. 

இதில் நடித்தது பற்றி பலரும் பல விதமாக எழுதிவருகிறார்கள். அதேபோல் நான் நடித்ததை மறுத்ததாக சிலர் எழுதி உள்ளனர். அதுவும் தவறு 

தொடர்ந்து இதுபோல் நடிப்பீர்களா? தொடர்ந்து இது போல் நடிக்கும் எண்ணமில்லை. வருங்காலத்தில் இதுபோல் நடிக்கமாட்டேன். 

இதற்கு முன்பு பேராண்மை படத்தில் நானும் ஒரு நடிகையாக நடித்திருந்தேன். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு சர்டிபிகேட் படம் தந்துள்ளதன் மூலம் இது ஆபாச படம் அல்ல என்பதும் தெளிவாகும்.  படம் இந்த மாதம் இறுதியில் ரிலிஸ்சாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: