முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சங்கரன்கோவில் தொகுதி வாக்கு எண்ணிக்கை

புதன்கிழமை, 21 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சங்கரன்கோவில்.மார்ச். - 21 - சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்குபதிவு 18ம் தேதி நடைபெற்றது. இதில் 77.50சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த முறை பதிவான வாக்குகளை விட 2 சதவீதம் அதிகமாகும். ஆண்களை விட பெண்களே இந்த முறை ஆர்;வத்தடன் வந்து வாக்களித்தனர்.
 அதுவும் முதல்வர் வருகைக்கு பின்பு அதிமுவிற்கு அமோக ஆதரவு காணப்பட்டது. இந்த தேர்தலுக்கு 242வாக்கு சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு புளியங்குடி வீராச்சாமி செட்டியார் கல்லுாரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தனி அறையில் வைக்கப்பட்டு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அவற்றின் முன் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் படை பாதுகாப்புடன் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. அவற்றை அடுத்து துணை ராணுவ படையும், கல்லுாரி வாசலில் மற்ற காவல்துறையினரும் பாதுகாப்பில் ்டுபட்டுள்ளனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை 8மணிக்கு துவங்குகிறது. 10மணிக்குள் அதிமுகவின் வெற்றி நிலவரம் பற்றி தெரிந்து விடும். மதியம் 1மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தினர் தெரிவித்தனர். மொத்தம் 17சுற்றுகள் எண்ணப்படும் என தெரியவருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 159717. இதில் ஆண்கள் 77294 பேரும் பெண்கள் 82423 பேரும் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 77.50 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்