முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 கம்பெனிகளில் கார்த்திசிதம்பரம் சேர்மன்...!

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,பிப்.- 28 - 2 ஜி வழக்கின் பெரும்பாலான பணபரி மாற்றம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மூலம் நடைபெற்றதாக பரபரப்பு குற்றம் சாட்டிய சுப்பிரமணியசாமி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகள் பட்டியலையும் வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் சுப்பிரமணியசாமி கூறியதாவது 2 ஜி வழக்கு விசாரணையில் தி.மு.க வை சேர்ந்த அமைச்சர்  பழனி மாணிக்கம் தலையிடுகிறார். இவர் தலையீடு குறித்து சிபிஐ மத்திய விஜிலன்ஸ் கமிட்டியிடம் புகார் அளித்துள்ளது.2 ஜி சம்பந்தமாக தமிழ்நாடு குற்றவாளிகளின் சொத்து பற்றி கணக்கெடுப்பு பற்றி திருச்சியை சேர்ந்த ஆல்பர்ட் மனோகரன் என்பவரை நியமித்துள்ளனர்.ஆனால் இதுபற்றி எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை இதுபற்றி விசாரணைக்கு இடையூராக இருக்கும் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தை நீக்க வேண்டும் அல்லது வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.மேலும் கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் உதவி வருகின்றனர் என்றும் இதுபற்றி தான் கூறிய கருத்தையே பிரதமர் மன்மோகன் சிங்கும் தற்போது கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படாததால் கூடுதல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சி நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக மத்திய முதன்மை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ரூ2100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார். மேலும் 2 ஜி வழக்கில்  சிதம்பரத்தை தாம் விடப்போவதில்லை என்றும் மேலும் பல ஆதாரங்களை வரும் மார்ச் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.டில்லி உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி தனது தீர்ப்பில் 70 பத்திகளில் 68 பத்திகளை தனக்கு ஆதரவாக எழுதிவிட்டு 2 பத்திகளை சிதம்பரத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளார்.என்னுடைய வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிதம்பரம் 2ஜி வழக்கில் ராசாவுடன் ஈடுபாடு உண்டு நான் கூறிய ஆதாரங்களை நீதிபதி  உண்மை என்று கூறிவிட்டு சிதம்பரம் கிரிமினல் மனப்பான்மையோடு செயல்படவில்லை என்று கூறி ரத்து செய்தது ஏற்புடையதல்ல.ஊழல் விவகாரத்தில் பதவியை துஷ்பிரயோகம் செய்தால் மட்டும் போதாது கிரிமினல் மனப்பானமையோடு செயல்பட்டாரா இல்லையா என்பதை வழக்கு விசாரணை தான் முடிவு செய்ய வேண்டும்.சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் மூலம் தான் எல்லா பணப் பரிமாற்றங்களும் நடந்தது 12 கம்பெனி மூலமாக அவர் எல்லா பணத்தையும் முதலீடு செய்துள்ளார். சிதம்பரம் கர்நாடகத்தில் உள்ள 25 சதவிகித இடங்களுக்கு முதலாளி. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தையும் குற்றவாளிகளை சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.என்று கூறி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகளின் பெயர் பட்டியலையும் சுப்பிரமணியசாமி வெளியிட்டார்.12 கம்பெனிகளுக்கும் கார்த்தி சிதம்பரம்  சேர்மனாக இருப்பதாக கூறினார். அதில் 2 கம்பெனிகளுக்கு 2ஜி பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை பற்றி விரைவில் ஆதாரத்தோடு வெளியிடுவேன் என்று கூறினார். 

காய்மக்கடு எஸ்டேட் லிமிடெட், கபாலீஸ்வரர் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சில கம்பெனிகள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்