முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஒதுக்கீடு - பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். - 28 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்களில் சில மொரீஷியஸ் நாட்டு பதிவை பயன்படுத்தி பல ஆயிரம் கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.  இந்தியாவில் தொழில் செய்யும் டெலிகாம் நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஈட்டும் லாபத்தை மூலதன ஆதாயமாக கருதித்தான் வருமான வரித்துறை வரி விதிக்கிறது. ஆனால் 2 ஜி சேவை அளிக்க உரிமம் பெற்றுள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் அவற்றின் பண பரிமாற்றங்கள் வெளிநாடுகளில்தான் நடைபெறுகின்றன. அவை மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு இந்திய அரசின் வரி விதிப்பு எல்லையை தவிர்க்கின்றன. அது மட்டுமல்லாமல், மொரீஷியஸ் நாட்டுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை இந்த நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. பங்குகளின் உரிமையை மாற்றி கொண்டும், பெருந்தொகையை கடனாக பெற்றிருப்பதாக கணக்கு காட்டியும், ஏற்கனவே வாங்கிய கடன் மீது மேலும் கடன் வாங்கியதை போல கணக்கு கொடுத்தும், அடித்தள கட்டமைப்புக்கு செலவிட்டதை போல கணக்கு எழுதியும் வரி செலுத்துவதை தவிர்க்கப் பார்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  வோடபோன் வருமான வரி பாக்கி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக அளித்துள்ள தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வருமான வரித்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இந்த நிறுவனங்களின் உத்தியை விளக்க முடிவு செய்துள்ளது வருமான வரித்துறை. சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன் இதற்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்