முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.சார்பில் புதுவையில் இன்று பந்த்

புதன்கிழமை, 21 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுச்சேரி, மார்ச்.- 21 - இலங்கையில் இறுதி கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறலை கண்டித்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுவை மாநிலத்தில் அதிமுக சார்பில் இன்று(21-ந் தேதி) பந்த் போராட்டம் நடைபெறுகிறது.  இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், புரட்சிகர சோசலிஸ்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், தமிழர் தேசிய இயக்கம், கிராம பஞ்சாயத்து கூட்டமைப்பு, தமிழர் களம், அகில இந்திய மாணவர் மறுமலர்ச்சி இயக்கம், புதுவை மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்லன. இலங்கை தமிழர் நலனுக்காக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசும் தெரிவித்துள்ளது.  பந்த் போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், பஸ், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது. புதுவை பஸ் நிலையத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினர் ஒவ்வொரு கடையாக சென்று ஆதரவு தரும்படி கோரி நோட்டீஸ் வழங்கினர்.  இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பாண்டுரங்கன், பெரியசாமி எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், நகர செயலாளர் ரவீந்திரன், நிர்வாகிகள் காசிநாதன், திருநாவுக்கரசு, பிரபுதாஸ், சுப்பிரமணி, தொகுதி செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, குமார், தமிழ்செல்வன், பால்ராஜ், செந்தில்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பந்த் போராட்டத்தை முன்னிட்டு இன்று வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது என்று தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. இது குறித்து புதுவை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாரதி கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை பிரச்சனை மிக முக்கியமான ஒன்றாகும். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நாங்களும் எங்கள் பங்கலிப்பை தர தயாரக உள்ளோம். எனவே நாளை(இன்று) முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வோம். புதுவையில் நாளை(இன்று) தனியார் பஸ்களை இயக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி கூறும்போது, நாளை(இன்று) முழு அடைப்பு போராட்டத்தில் எங்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன. எனவே அரசு பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்