முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 19 - உத்தரகாண்ட் மாநில முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. அதே நேரம் பதவி விலகிய ஹரீஸ் ராவத்துக்கு உரிய பதவி அளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.  உ.பி. மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இவற்றில் உ.பி. முதல்வராக சமீபத்தில் முலாயம்சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் பதவியேற்றார். இவர்தான் இம்மாநிலத்தின் இளம் முதல்வராவார்.  இதே போல் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இம்மாநில முதல்வராக விஜய் பகுகுணா நியமிக்கப்பட்டார். ஆனால் தனக்கு இந்த பதவி மறுக்கப்பட்டதால் வேதனையடைந்த மத்திய பாராளுமன்ற விவகார மற்றும் வேளாண் துறை இணையமைச்சர் ஹரீஸ் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் உத்தரகாண்ட் மாநில முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும் காங்கிரஸ் மேலிடம் நேற்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது. போர்க்கொடி உயர்த்திய ஹரீஸ் ராவத்துக்கு உரிய பதவி அளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வீரேந்திரசிங்(உத்தரகாண்ட் மாநில பொறுப்பாளர்) கூறுகையில், ஹரீஸ் ராவத்துக்கே பதவி கொடுக்க கட்சி தலைவர் சோனியா விரும்பினார். ஆனால் நீண்ட யோசனைக்குப் பிறகும் பரிசீலனைக்கு பிறகும் பகுகுணா தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.  இது பற்றி அவர் மேலும் கூறுகையில், ஹரீஸ் ராவத்தின் மனைவி ரேணுகாவின் பெயர் ராஜ்யசபா தேர்தலுக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் முதல்வராக பதவியேற்றுள்ள பகுகுணா, தனது மெஜாரிட்டி பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இம்மாத இறுதியில் உத்தரகாண்ட் சட்டசபை கூடுகிறது. அப்போது அவர் தனது மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸ் மேலிடம் விஜய் பகுகுணாவை மாற்றப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்