முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் முன்னிலையில் முத்துச்செல்வி பதவியேற்பு

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.23 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்துச்செல்வி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சொ.கருப்பசாமி மறைவை யொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அமோகமாக வெற்றி பெற்றார். கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இன்று வரை சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்று வருகின்றனர். இந்த தொகுதியில் அதிமுக தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்று 5வது முறையாக தொகுதியை தனது வசப்படுத்தியுள்ளது. அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியுள்ள சங்கரன்கோவில் தனி தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏ, என்ற பெயரையும்  முத்துச்செல்வி பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்ட அவர் சென்னை வந்தார். அவரது பதவியேற்பு விழா நேற்று சென்னை கோட்டையில் உள்ள தமிழக சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் அறையில் நடைபெற்றது.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காலை 10.35 மணி அளவில் வருகை தந்தார். அவரை சபாநாயகர், துணை சபாநாயகர் வரவேற்றனர்.  பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் முத்துச்செல்வி எம்எல்ஏவாக பொறுப்பேற்றார்.  அவருக்கு சபாநாயகர் டி.ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.   தனது தந்தை சங்கரலிங்கத்தின் வழியில் முத்துசெல்வி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுள்ளார்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சரிடம் முத்துச்செல்வி ஆசி பெற்றார்.  தொகுதி வளர்ச்சிக்கும், தொகுதி மக்களுக்கும் சிறந்த முறையில் செயலாற்றுங்கள். சட்டமன்றத்தில் நன்றாக செயல்படுங்கள் என்று கூறி முத்துச்செல்விக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் தனபால், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, சமூக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, கதர்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன்  உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற தலைமைக் கொறடா மோகன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.  புதிதாக வெற்றி பெற்ற முத்துச்செல்வியுடன் தமிழக சட்டசபையில் பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago