முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: ராசாவிடம் விசாரணை நடத்த ஜே.பி.சி. முடிவு

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 23 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா ஆகியோரை நேரில் அழைத்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து டெல்லியில் கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோ நிருபர்களிடம் கூறியதாவது,  2 ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலர் மாத்தூரிடம் விசாரணை நடத்தினோம். 2006 ம் ஆண்டு ஜூலை முதல் 2007 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவர் செயலராக பணியில் இருந்துள்ளார். ராசா எடுத்த பல நடவடிக்கைகளுக்கு அவர் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அலைக்கற்றை விவகாரத்தில் முக்கியமாக தொடர்பில் இருப்பதாக கருதப்படும் ஆ. ராசா, சித்தார்த்த பெகுரா ஆகியோர் சிறையில் உள்ளனர். தினந்தோறும் நீதிமன்ற விசாரணைக்கும் ஆஜராகி வருகிறார்கள். அவர்களை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு டெல்லி திகார் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதுவோம். 

முதலில் சித்தார்த்த பெகுராவிடமும், பின்னர் ஆ. ராசாவிடமும் விசாரணை நடத்துவோம். சித்தார்த்த பெகுராவிடம் ஏப்ரல் 11 ம் தேதி விசாரணை நடத்தப்படும். ஆ. ராசாவிடம் விசாரணை நடத்துவதற்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று சாக்கோ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்