முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை மனோரமா மருத்துவ மனையில் அனுமதி

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, மார்ச்.23 - பிரபல முன்னனி நடிகை ஆச்சி மனோரமா (வயது72) இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி விபரம் வருமாறு:- மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் 1958 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மனோரமா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தற்போது குணசித்திர வேடங்கள் மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மனோரமாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் அவதிபட்டிருக்கிறார்.உடனே அருகில் உள்ள மைலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அதற்குறிய​மருத்துவம் செய்து வருகிறார்கள் உடன் மனோரமாவின் மகன் பூபதி இருந்து கவனித்து வருகிறார்.இன்னும் இரண்டு தினங்களில் ஆச்சி மனோரமா வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே கால்வலியால் அவதிப்பட்டு மருத்துவம் செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நேற்று காலை மனோரமா இறந்துவிட்டதாக வதந்தி செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்