முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தலைமையில் மாற்றமில்லை! கவுடா பேட்டி

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 23 - கர்நாடக மாநிலத்தில் தலைமையில் மாற்றமிருக்காது என்று பாரதீய ஜனதா கட்சி மேலிடம் தனக்கு உத்தரவாதம் அளித்திருப்பதாக அம்மாநில முதல்வர் சதானந்த கவுடா டெல்லியில் நேற்று தெரிவித்தார். முன்னதாக, கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரி உட்பட பல்வேறு தலைவர்களை முதல்வர் சதானந்த கவுடா டெல்லியில் நேற்று சந்தித்தார். அதன் பிறகு இத்தகவலை சதானந்த கவுடா தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்த உடுப்பி லோக்சபா இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அதிர்ச்சி தரும் வகையில் தோல்வியடைந்தது. இதையடுத்து முதல்வர் சதானந்த கவுடாவை மாற்றி விட்டு எடியூரப்பாவை முதல்வராக்க கட்சி மேலிடம் திட்டமிடுவதாக தகவல் வெளியானது. மேலும் தன்னையே முதல்வராக்க வேண்டும் என்று எடியூரப்பாவும் கடந்த சில நாட்களாக போர்க்கொடி உயர்த்தி வருகிறார். 

இந்த நிலையில்தான் சதானந்த கவுடா டெல்லி புறப்பட்டு சென்று மேலிட தலைவர்களை சந்தித்தார். அப்போது தலைமையில் மாற்றமிருக்காது என்று அவரிடம் கட்சி மேலிடம் உறுதியளித்தது. இத்தகவலை சதானந்த கவுடாவே டெல்லியில் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து கட்சி மேலிடத்துடன் தாம் கலந்து ஆலோசித்ததாக தெரிவித்தார். கட்சியை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து தாம் மேலிடத்துடன் ஆராய்ந்ததாகவும் சதானந்த கவுடா தெரிவித்தார். மற்றபடி எடியூரப்பா டெல்லியில் இருப்பது தமக்கு தெரியாது என்றும் அவர் கூறிக் கொண்டார். இந்த நிலையில் எடியூரப்பா நேற்று பிற்பகலில் கட்காரியை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்று 60 எம்.எல்.ஏக்கள் அவரை ஆதரிப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்