முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 23 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 10.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 2004 ம் ஆண்டுமுதல் 2009 ம் ஆண்டுவரை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ. 10.67 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழுவின் நகல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாராளுமன்றத்திற்கு வெளியே பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜவ்தேகரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார். இந்த நிலக்கரி சுரங்க ஊழல் மிகப்பெரிய ஊழல். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் இந்த விசாரணையை ஒரு நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். இந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழுக்க முழுக்க ஊழல்கள்  நிறைந்த அரசாக உள்ளது என்றும் அவர் கூறினார்.  

ஏலம் இல்லாமல் இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ஏன் செய்யப்பட்டன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தியதில் ரூ. 70 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ஆனால் இப்போது புதிதாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ரூ. 10.67 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இப்படி இந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசாக மாறி இருக்கிறது. விமானத்துறை முதல் சுரங்கத்துறை வரை எங்கு பார்த்தாலும் ஒரே ஊழல் மயம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்