முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைநோக்குப் பார்வை திட்டம்: சரத்குமார் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,மார்ச்.23 - ``2023ல் தமிழ்நாடு தொலை நோக்குப்பார்வை'' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் கனவு நனவாகட்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுருப்பதாவது. ``2023ல் தமிழ்நாடு தொலை நோக்கு பார்வை'' என்ற மிகப்பெரிய திட்டத்தை ரூ.15லட்சம் கோடி செலவிலான இலக்கில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது 25 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைப்பதன் மூலம் குடிசைகள் குடிசைப்பகுதிகள் அற்ற தமிழகம். 10 ஆண்டுகளில்  20,000 மெகாவாட் மின்சார உற்பத்தியின் மூலம் தொழில் விவசாயத்திற்கு தடையற்ற விவசாயம் ,  புதிய தொழில்கள் தொடங்க ஊக்குவிப்புகள், இந்தியாவிலேயே முதன்மையான வளர்ச்சி விகிதம் , வல்லரசு நாடுகளில் உள்ள நகரங்களில் வாழும் மக்களுக்கு இணையான தனி நபர் வருமானம், அனைவருக்கும் தொழில் வாய்ப்பு அனைத்து துறைகளிலும் நவீன வளர்ச்சி என தொலை நோக்குப்பார்வையோடு திட்டமிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின்  கனவு நனவாகட்டும் தமிழகம் உலகில் உயர்ந்த இடத்தைப்பெறட்டும் என்று அந்த அறிக்கையில் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago