முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி வெற்றி

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், பிப். - 3 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் மெல்போர்னில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இலங் கை அணி 9 ரன் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு ள் நுழைந்தது.  வெற்றி பெற வேண்டிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி ஓவர் வரை இழுத்தடித்து வேண்டுமென்றே தோற்றது. இதன் மூலம் இந்தியாவை இறுதிச் சுற்றுக்குள் நுழையவிடாமல் தடுத்து விட்டது.  இலங்கை அணிக்கு எதிராக நடந்த கடைசி லீக்கில் இந்திய வீரர்கள் மின்னல் வேகத்தில் ஆடி 40 ஓவருக்குள் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்று போனஸ் புள்ளியும் பெற்றனர்.  இதனைக் கண்டு ஆஸ்திரேலிய அணி மிரண்டு விட்டது. இந்திய அணி கடும் சவாலை அளிக்கும் என்று கருதியதால் இலங்கையை வெற்றி பெற வைத்து விட்டது.  ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒரு நா ள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக வெ கு விமர்சையாக நடந்து வந்தது. இதன் கடைசி லீக் போட்டி நேற்று மெ ல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது.  இதில் ஆஸ்திரேலியா, மற்றும் இலங்கை அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்ப ட்ட 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை யும் இழந்து 238 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில் 3 வீரர்கள் அரை சதம் அடித்தனர்.  சண்டிமால் அதிகபட்சமாக, 84 பந்தில் 75 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்ட ரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, கீப் பர் சங்கக்கரா 93 பந்தில் 64 ரன்னையும், திரிமன்னே 59 பந்தில் 51 ரன்னையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில், முன்ன ணி வீரரான கிறிஸ்டியன் 31 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இட ம் பெற்ற பட்டின்சன் 51 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.  ஆஸ்திரேலிய அணி 239 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற எளிய  இலக்கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 229 ரன்னை எடுத்தது. 

இதனால் இலங்கை அணி இந்த கடை சி லீக்கில் 9 ரன் வித்தியாசத்தில் வெற் றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி யது. இந்திய அணி இந்தத் தொடரில் இருந்து வெளியேறியது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், கேப்டன் வாட்சன் 83 பந்தில் 65 ரன்னையும், டே விட் ஹஸ்சே 74 பந்தில் 74 ரன்னையும், மைக் ஹஸ்சே 29 ரன்னையும், எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், மலிங்கா 49 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத் தார். குலசேகரா 38 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, சேனநாயகே, திரிமன்னே மற்றும் ஹெராத் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சண்டிமால் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்