முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா - இலங்கை முதல் இறுதிச்சுற்றில் மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பிரிஸ்பேன், மார்ச். - 4 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொட ரில் பிரிஸ்பேன் நகரில் இன்று நடக்க இருக்கும் முதல் இறுதிச் சுற்று ஆட்டத் தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கி ன்றன. ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பே ங்க் சார்பிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இதில் கோப்பையைக் கைப்பற்ற ஆஸ் திரேலியா, இலங்கை மற்றும் இந்தி யா ஆகிய 3 நாடுகள் களம் இறங்கின. இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. முன்னதாக நடந்த லீக் போட்டிகளில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 19 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இந்திய அணி 15 புள்ளிகள் பெற்று 3 -வது இடம் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறியது.  இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் அதிக முறை தோல்வி அடைந்து இருக்கிறது. இலங்கை அணி அதிக வெற்றி பெற்றதால் லீக் முடிவி ல் முதலிடம் பெற்றது. ஆஸி. 2-வது இடம் பிடித்தது.  ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டங்களில் இலங்கையிடம் அதிக தோல்வி கண்ட தால் முதல் இறுதிச் சுற்றில் அந்த அணியை பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு ஆஸி. ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காயம் காரணமாக லீக் ஆட்டங்களில் ஆடாத கேப்டன் மைக்கேல் கிளார்க் இன்றைய போட்டியில் களம் இறங்கு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பீட்டர் பாரெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதி லாக கேப்டன் ஆடுவார் என்று கூறப் படுகிறது. இந்தப் போட்டிக்காக ஆஸி. அணி தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறது.  ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் இந் தத் தொடரில் சற்று பலவீனமாகவே உள்ளது. டேவிட் ஹஸ்சே ஒருவர் மட்டுமே நன்றாக ஆடி வருகிறார்.
வார்னரும், வாடேயும் தொடக்க வீரர் களாக ஆடுவார்கள். வாட்சன் கடந்த போட்டியில் 3-வது வீரராக இறங்கி னார். எனவே இந்தப் போட்டியிலும் அவர் 3-வது வீரராக இறக்கப்படலாம்.  இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் காயம் அடைந்திருப்பது அணி நிர்வாக த்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாற்று வீரர்களை இறக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.  இலங்கை அணியில் மேத்யூஸ் , பெரீ ரா மற்றும் மகரூப் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். எனவே பெரீராவுக் கு பதிலாக கபுகேந்திரா ஆடுவார் என் று கூறப்படுகிறது. மேத்யூஸ் மற்றும் மகரூப் இருவரும் ஆடுவதில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தத் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. கேப்டன் ஜெயவர்த்தனே, தில்ஷான் மற்றும் சங் கக்கரா ஆகியோர் நன்கு ஆடி வருகின்றனர். ஹெராத் லீக்கில் சரியாக ஆடாத தால் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்ப து சந்தேகமே.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் இன்று நடக்க இருக்கும் முதல் இறுதிச் சுற்றுப் போட்டி இந்திய நேரப்படி கா லை 8.50 மணிக்கு துவங்குகிறது. இந்த ப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனலி ல் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்