முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாடானை கூட்டத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருவாடானை, மார்ச்.- 2 - திருவாடனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாள் விழாவில் நடிகர் ஆனந்த்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக ஆண்டாவூரணி புனித சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 10 -ம் மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை வழங்கினார். மாவட்ட கழகச் செயலாளர் ஆணிமுத்து தலைமையில் ஆனந்த்ராஜ் வழங்கினார்.  பின்னர்  திருவாடானையில் அம்மா பேரவை சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாள் விழா ஒன்றியைச் செயலாளர் செங்கை ராஜன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ஆணிமுத்து, ஒன்றியப்பெருந்தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன், துணைதலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக நடிகரும், தலைமைகழக பேச்சாளருமான ஆனந்த்ராஜ் கலந்து கொண்டுசிறப்புரை ஆற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தின் தி.மு.க. ஆட்சியில் செய்த தவறுகளை திருத்தி தற்போது நல்லாட்சி செய்து கொண்டு வரும் அம்மா மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை யாராக இருந்தாலும் உடனடியாக மாற்றப்படுவார். தூக்கி எவியப்படுவார்கள்  எங்களால் தான் அம்மா ஆட்சிக்கு வரமுடியும் என்று  விஜயகாந்த் கூறிவருகிறார். கடந்த ஒரு ஆட்சியில் ஒரு எம்.எல்.ஏ. சீட் வைத்துக்கொண்டு காலம் கடத்தியவருக்கு எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்தை தந்தது இந்த அம்மாவின் கூட்டணி ஆட்சியாலதான் யார் யாரால் அரசியலுக்கு அந்தஸ்து கிடைத்தது என்று எண்ணி பார்க்க வேண்டும் தே.மு.தி.கா.வின் கூடாரம் இன்னும் சில நாட்களில் காலியாகி வரும் இவர் பின்னாடி ஒரு சினிமா நடிகன் கூட இல்லை. ஸ்பெக்ரம்  ஊழலில் எத்தனை லட்சங்களை கொள்ளையடித்த தி.மு.க. அரசு மீண்டும் 6-வது முதலமைச்சர் கலைஞர் தான் என்று தி.மு.க. வினர் கூறிவந்தனர். ஆனால் மக்கள் விழிப்புடன் வாக்களித்தனர். பிரதமர் யார் என்று நிர்ணயிக்கும் தகுதி அம்மா ஒருவருக்கே உண்டு என்று தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய கவுன்சிலர் பெரியநாயகம், தமிழ்செல்வி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விடுரையரசு, திருவாடானை ஊராட்சி மன்ற தலைவர் காளை, குணசேகரன், ஜெயராமன் ஒன்றிய தலைவர் மணிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்