முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம்: சாய்னா நெக்வால்

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், மார்ச். 24 - எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தான் என்று இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெக்வால் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அடுத்த ஆண்டு நடக்க இருக்கு ம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதல்ல என்றும் இதற்காக தீவிர பயிற்சி எடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார். 

சமீபத்தில் சர்வதேச அளவிலான சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்தது. இதில் சாய்னா ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். பேசல் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்ற பின்பு நாடு திரும்பிய சாய்னா நெக்வால் ஐதராபாத்தில் நிருபர்களைச் சந்தித்த போது மேற்கண்டவாறு கூறினார். 

சுவிஸ் ஓபனில் பட்டம் வென்றது குறி த்து அவரிடம் கேட்ட போது, இந்தப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் தனது தன்னம்பிக்கை புத்துணர்வு பெற்று இருக்கிறது என்றும் நெக்வால் தெரிவித்தார். மேலும் இது எனக்கு முக்கியமானது. ஏனெனில் அடுத்து ஒலிம்பிக் போட்டி வருகிறது. எனக்கு தற்போது நல்ல இடைவெளி தேவை. நல்ல தருணத்தில் அது வந்துள்ளது. எனது கவனத்தையும், தன்னம்பிக்கை யையும் மீண்டும் பெற சிறிது காலம் தேவைப்பட்டது. இதன் மூலம் நான் முன்னேற்றம் பெற்றேன். எனவே நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.  மேலும், இடைப்பட்ட காலத்தில் நான் எந்தப் போட்டியிலும் பட்டம் வெல்லாததால் நெருக்கடிக்கு உள்ளானேன். தவிர, எனக்கு கனுக்காலில் காயமும் ஏற்பட்டு இருந்தது. இறுதியில் பயிற்சியாளரான கோபிசந்த் என்னிடம் நீ நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறாய். இதனால் போட்டிகளில் உன்னால் சரியாக ஆட முடியவில்லை என்றார். தவிர, பதட்டத்தால் நீ சரியாக விளை

யாட வில்லை. மைதானத்தில் உனது ஆட்டத்தில் உயிர் இல்லை. மூவ்மென்ட்ஸ் சரியாக வரவில்லை. எனவே சிறிது ஓய்வு எடுத்துக் கொள். பின்பு உற்சாகத்துடன் ஆடு. நான் உனது தவறுகளை திருத்துகிறேன் என்றார். 

பயிற்சியாளர் கோபி சொன்ன ஆலோசனையின் படி நான் சிறிது கால ஓய்வுக்குப் பிறகு சுவிஸ் ஓபனில் பங்குகொண்டு வெற்றி பெற்றேன். எனவே நான் நெருக்கடிக்கு உள்ளாகாமல் அமைதியாக ஆட வேண்டும்.  சர்வதேச அளவில் பங்கேற்கும் ஒரே இந்திய வீராங்கனை நான் தான். எனவே மக்கள் என்னிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர். நான் பதட்டம் அடையாமல் விளையாடினால் அனைத்து ஷாட்டுகளையும் சிறப்பாக அடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன் என்றும் சாய்னா தெரிவித்தார். சீன வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் கடும் சவாலை அளிக்கக் கூடியவர்கள். இந்த முறை நான் அவர்களை எளிதாக வீழ்த்துவேன். ஏனெனில் நான் இந்த முறை பதட்டமாகாமல் விளையாட இருக்கிறேன் என்றும் நெக்வால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்