முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே: தா. பாண்டியன்

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, மார்ச்.24 - கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், 

தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை பெருக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானதுதான். இந்த அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பலதரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அவர்களுடன் தொடர்பு கொண்டு போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். இடிந்தகரை உள்ளிட்ட கிராம மக்களுக்கு மின்சாரம், குடிநீர், பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் தடை செய்யப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு அவை தடையின்றி கிடைக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். 2014 ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் 2013 லேயே தேர்தல் வரக்கூடும். ஏனென்றால் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இந்தியாவுக்கு கொல்கத்தா முதல் தலைநகரமாகவும், புது டெல்லி 2 வது தலைநகரமாகவும் உள்ளது. இலங்கை போரில் ஏற்பட்ட கொடூரங்கள் குறித்த தகவல்களை இந்திய கம்யூனிஸ்டு கியூபா, ரஷ்யா, வெனிசுலா போன்ற நாடுகளுக்கு எடுத்துச் சென்று விவாதிக்க வைத்துள்ளது. தமிழக பட்ஜெட்டில் ஆறு, குளம், ஏரி, கால்வாய் பாசன திட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்