முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரதீபா வழங்கினார்

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

புது டெல்லி, மார்ச்.24 - பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கினார். பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. மொத்தம் 53 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மறைந்த இசைக் கலைஞர் பூபேந்திரகுமாருக்கு பத்மவிபூஷன் விருதை ஜனாதிபதி வழங்கினார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ்வர், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் காந்திலால் சஞ்சேட்டி ஆகியோருக்கும் பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது. கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன், சென்னை தொழிலதிபர் எம்.வி. சுப்பையா, இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய ரோனன்சென், திரைப்பட இயக்குனர் மீராநாயர் உள்ளிட்டோருக்கு பத்மபூஷன் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். நாடகவியல் ஆய்வாளரான முத்துச்சாமி, இயக்குனர் பிரியதர்ஷன், பேட்மிண்டன் பயிற்சியாளர் ஆரிப் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்