முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரஞ்சீவி - ரேணுகா சவுத்ரி ராஜ்யசபா எம்.பிக்களாக தேர்வு

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

ஐதராபாத், மார்ச்.24 - நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆந்திராவில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக இவர்கள் எம்.பி.யாகி உள்ளனர். வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாளான 22 ம் தேதியன்று 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிட்டனர். எனவே இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மகராஷ்டிராவில் இருந்து மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், ராஜீவ்சுக்லா ஆகியோர் மீண்டும் ராஜ்யசபை உறுப்பினராகி உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் 2 பேர், பா.ஜ.க சார்பில் ஒருவர், சிவசேனா சார்பில் ஒருவர் என 6 பேர் மராட்டியத்தில் இருந்து எம்.பியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் இருந்து பா.ஜ.க.சார்பில் 4 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் என 5 பேர் எம்.பியாகி உள்ளனர். அரியானாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஜாதியால்பாத்ரா மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராகி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்