முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.24 - தமிழக பட்ஜெட் 2012-2013 தயாரிப்பு குறித்து வணிகர் சங்க பிரநிதிகளுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். தமிழக பட்ஜெட் 2012-2013 தயாரிப்புக்கு முன்னதாக வணிகர் சங்க பிரநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம்,வணிக வரித்துறை முதன்மைச்செயலாளர் சுனில் பாலிவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அதன் பிரதிநிதிகள் கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:-

விற்பனை வரிவிலக்கு வரம்பு ரூ.10 லட்சம் என்பதை ரூ.30 லட்சமாக உயர்த்தவேண்டும்.மற்ற வணிகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விற்பனை வரி விலக்கு தொகை ரூ.5 லட்சம் என்பதை ரூ.20 லட்சமாக உயர்த்தி ஆணையிட வேண்டுஇம்.மத்திய அரசு பட்ஜெட்டில் அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரியை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. உணவு  பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டம் 2006 என்ற சட்டத்தை 2011 ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.இந்த சட்டத்தின் விதிமுறைகள் குறித்து வணிகர் சங்கரப்பிரதிநிதிகளுடன் எந்தவித ஆலோசனையும், நடத்தப்படவில்லை.இந்த சட்டத்தில் விதிமுறைகளும், அபராதங்களும், தண்டனைகளும் சில்லரை வணிகர்களையும் சிறிய தயாரிப்பாளர்களையும் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரையும் பாதிக்கின்ற வகையில் உள்ளன. எனவே, மாநில அரசு இந்த சட்ட அமலாக்கத்தை நிறுத்து வைக்க வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிரதிநிதிகள் முன்வைத்தனர். இது போல தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்க பிரநிதிகள்  வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:-

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் எல்லையில் கடுமையான சோதனைகள் நடத்தினால், அரசுக்கு சுமார்ரூ.750 கோடி வருவாய் கிடைக்கும். வணிகநல வாரிய உறுப்பினர்கள் இறந்தால்., அவர்களின் வாரிசுகளுக்கு குடும்ப நல நிதியாக தற்போது ரூ.1 லட்சம் வழங்குவதை, ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.விற்பனை வரியை 2 மாதத்துக்கு ஒருமுறை மாதத்தின் கடைசி நாட்கள் வரை செலுத்தலாம் என அறிவிக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்க பிரதிநிதிகள் வலுயுறுத்தினார்கள்.கூட்டத்தில் ஏராளமான வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளையும் முன்வைத்து, பட்ஜெட் தயாரிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்