முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் எம்.எல்.ஏ.க்கள் ஆபாசப்படம் பார்க்க வில்லையாம்..!

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

காந்திநகர், மார்ச் 24 - குஜராத் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ஆபாசப் படம் பார்த்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்த ஐபாடு செல்போனை சோதித்த தடய அறிவியல் பரிசோதனைக்கூடம் அவர்கள் ஆட்சேபகரமான ஆபாசப் படம் எதையும் பார்க்கவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டசபையில் சில எம்.எல்.ஏ.க்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக ஏற்கனவே பரபரப்பு செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து குஜராத் மாநில சட்டசபையிலும் இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஐ பாடு செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததாக பத்திரிகையாளர் ஒருவர் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சங்கர் செளதாரி, ஜெதாபாத் பன்வாத் ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர். இதனைத் தொடர்ந்து அந்த பிரச்சனைக்குரிய ஐபாடு செல்போன் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த ஐபாடு போனை ஆய்வு செய்த தடய அறிவியல் ஆய்வகம், குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் இந்த ஐபாடில் ஆபாசப் படம் அல்லது ஆட்சேபகரமான காட்சிகள் எதையும் எம்.எல்.ஏ.க்கள் பார்க்கவில்லை என்று உறுதி செய்தது. ஆய்வகத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பிரச்சனைக்குரிய ஐபாடில் 4160 போட்டோக்கள் இருந்ததாகவும், 11 வீடியோ படங்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது. ஆனால் அவற்றில் ஆட்சேபகரமான அல்லது ஆபாசமான படங்கள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை குஜராத் சட்டசபையில் நேற்று சபாநாயகர் கண்பட் வாசவா தெரிவித்தார். 

அப்போது பேசிய சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. செளதாரி உண்மை வெற்றிபெற்றது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்