முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 25 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் இன்று நடக்க இரு க்கும் 3 -வது காலிறுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந் து அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 19 -ம் தேதி துவங்கியது. இந்தப் போட்டி அடுத்த மாதம் 2 -ம் தேதியுடன் முடிவ டைகிறது. தற்போது இந்தப் போட்டி விறுவிறுப்பான நிலையில் உள்ளது. 

உலகக் கோப்பையில் முதலில் லீக் போட்டிகள் நடைபெற்றன. இதி ல் 14 அணிகள் பங்கேற்றன. இதன் முடிவில் 8 அணிகள் கூடுதல் புள்ளி கள் பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 6 அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின. 

காலிறுதிச் சுற்று கடந்த 23 -ம் தேதி துவங்கியது. இதன் முதல் ஆட்டத் தில் பாகிஸ்தான் அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 10 விக்கெ ட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 

நேற்று நடந்த 2 -வது காலிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான கேப்ட ன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேப்ட ன் தோனி தலைமையிலான இந்திய அணியும் மோதின. 

இதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வ து கால் இறுதி ஆட்டம் வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள மிர்பூர் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக் கின்றன. தென் ஆப்பிரிக்கா அணி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் மட்டும் தான் தோற்றது. இந்தியா, மே.இ.தீவுகள், அயர்லாந்து, வங்காளதேசம், நெதர்லாந்து அணிகளை வென்றது. 

நியூசிலாந்து அணி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளை வென்றது. ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளிடம் தோற்று இருந்தது. 

தென் ஆப்பிரிக்கா, அணியில் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, காலிஸ், டுமினி, பெலிசிஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஸ்டெயின், மார்னே, மார்கெல், இம்ரான் தாகீர் போன்ற சிறந்த பெளலர்களும் உள்ளனர். 

நியூசிலாந்து அணியில் மெக்குல்லம், டெய்லர், ரைடர் போன்ற சிறந் த பேட்ஸ்மேன்களும் செளதீ, மில்ஸ், நாதன் மெக்குல்லம் போன்ற சிறந்த பெளலர்களும் இடம் பெற்று உள்ளனர். 

உலக கோப்பையில் இரு அணிகளும் மோதுவது 6 -வது முறையாகு ம். இதுவரை நடந்த 5 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 3 ஆட்டத்திலும், நியூசிலாந்து 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. பகல் - இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கு துவ ங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்