முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிஸ்ஸாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கடத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புவனேஷ்வர். மார்ச். 25 - ஒரிஸ்ஸா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரை  மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடத்தி செல்லப்பட்ட எம்.எல்.ஏ.வை மீட்க கோரி அம்மாநில சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. ஒரிஸ்ஸா மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தொடர்ந்து வன்ம முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு 2 போலிஸ்காரர்களை படுகொலை செய்த அவர்கள் அடுத்து இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் இரண்டு பேரை கடத்தி சென்றனர்.

அவர்களை விடுதலை செய்யும்படி ஒரிஸ்ஸா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட  மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அவர்களை விடுவிக்கவில்லை.

இத்தாலியர்களை விடுவிக்க ஒரிஸ்ஸா மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

இதனிடையே ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஜின்னா ஹிக்கா என்ற எம்.எல்.ஏ.வை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.

கோராபுட் -  லட்சுமிபூர் ரோட்டில் உல்ள தாராபூர் என்ற இடத்திற்கு பயங்கர ஆயுதங்களுடன் மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர். 

இந்த செய்தி காட்டு தீ போல ஒரிஸ்ஸா முழுவதும் பரவியது.  இதனால் இம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரிஸ்ஸா அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த சம்பவம் ஒரிஸ்ஸா சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   எம்.எல்.ஏ.வுக்கே  பாதுகாப்பு இல்லையா என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சபையில் இருந்த மைக்ரோபோன்களை அவர்கள் போட்டு உடைத்தனர்.

இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 

நேற்று காலை ஒரிஸ்ஸா சட்டசபை கூடியதுமே ஆவேசமாக வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  சபையின் மைய பகுதிக்கு விரைந்தனர்.  இடதுசாரி  மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் பிடியில் இருந்து  எம்.எல்.ஏ.வை மீட்க தவறிய முதல்வர் பிஜூ பட்நாயக் அரசு மீது அவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அப்போது எம்.எல்.ஏ. கடத்தப்பட்டது குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் சிறு விளக்கம் ஒன்றை அளித்தார்.

நாற்காலி , மேஜைகளை தள்ளிட்டும் பேப்பர்களை சபையில் பறக்க விட்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையை சூறையாடினர். 

இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.

வழக்கமான சபை நடவடிக்கைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து சபையை நண்பகள் 12.30 மணி வரை சபாநாயகர் ஆமத் ஒத்திவைத்தார்.

லட்சுமிபூர் எம்.எல்.ஏ.  நேற்று அதிகாலை 1 மணிக்கு கடத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்த கடத்தலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் ஆனால் இந்த கடத்தலை மாவோயிஸ்டு தீவிரவாதிகள்தான் செய்திருக்க வேண்டும் என்றும் நவீன் பட்நாயக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பதை  நேரில் கண்டறிய லட்சுமிபூருக்கு இரு அமைச்சர்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் கூறினர்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்பேது எம்.எல்.ஏ. கடத்தல் குறித்து அவரிடம் எடுத்துக்கூறியதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதே போல மத்திய உள்துறை செயலாவருடன் ஒரிஸ்ஸா தலைமை செயலாளரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். எம்.எல்.ஏ.கடத்தலை தொடர்ந்து ஒரிஸ்ஸா மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எம். எல்.ஏ.  எங்கே இருக்கிறார்  அவர் எப்படி இருக்கிறார் என்பது போன்ற விவரங்களை போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago