Idhayam Matrimony

மக்கள் பாதுகாப்பிற்கும் மட்டுமே காவல்துறை: ஏடிஜிபி ஜார்ஜ்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, மார்ச் 25 - கூடங்குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7 வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் ஏடிஜிபி ஜார்ஜ் நேற்று மீண்டும் கூடன்குளத்தில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 19ஆம் தேதி தமிழக அரசு அணுமின் நிலையத்தை இயக்க முடிவெடுத்ததை தொடர்ந்து கூடங்குளத்தில் போலீசார் மற்றும் துணை இராணுவ படையினர் குவிக்கப்பட்டனர். தற்போது முற்றுகை போராட்டம் நடைபெறாததால் போலீஸ் குவிப்பு குறைக்கப்பட்டு உள்ளது.  இருப்பினும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முகப்பில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு கலவர தடுப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளன.

அணுமின் நிலையத்தில் 6வது நாளாக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அணுமின் நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.  இதனிடையே தமிழக சட்ட ஒழுங்கு ஆணையர் ஜார்ஜ் நேற்று மீண்டும் கூடன்குளம் அணுஉலை பகுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார். 

கூடங்குளத்தில் பாதுகாப்பு பணியில் ்ஈடுபட்டிருக்கும் அதிரடி பாதுகாப்பு படையினரை ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் இன்று ?நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது

அணு மின் நிலைய பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களது கடமை.கிராம மக்களுக்கு எவ்விதமான நெருக்கடியையும் காவல்துறை வழங்க கூடாது, மக்கள் அமைதிக்கும் பாதுபாதுகாப்பிற்கும் மட்டுமே காவல்துறை வரவழைக்கப்பட்டுள்ளது நிலைமை சீராகும் போது அனைத்து படையினரும் திரும்ப பெறப்படுவார்கள்

தற்போது கூடங்குளத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. முற்றிலும் சீரான பிறகு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும். கூடங்குளம் போராட்டக் காரர்களுக்கு போலீசார் இடையூறும் செய்யவில்லை. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்ல அனுமதிக்கப் படுகிறது.  வழக்கு உள்ளவர்களை மட்டும் தான் போலீசார் கைது செய்துள் ளனர். கைதான 178 பேர் சாலை மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் சில தடைகளை ஏற்படுத்தி  உள்ளனர். அவற்றை அகற்றுமாறு கேட்டு கொண்டுள்ளோம். 

கூடங்குளம் பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம் என ஏடிஜிபி ஜார்ஜ் தெரிவித்தார். 

இதனிடையே 7 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ்ஈடுப்பட்டு வரும் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்ட 15 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்களை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்