முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு - மும்பையில் கோ-ஆப்டெக்ஸ் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.25 - பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் குளிர்சாதன வசதியுடன் நவீனபடுத்தப்பட்ட கோ​ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை தமிழக கைத்தறி துணிநூல்துறை அமைச்சர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- யுகாதி திருநாள் என கர்நாடகா மாநிலத்திலும், குடிபட்வா என மகாராஷ்டிரா மாநிலத்திலும், கொண்டாடப்படும் பண்டிகையை முன்னிட்டு, இந்த இருமாநில தலைநகரங்களில் குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ள கோ​ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  இவ்விரு மாநில தலைநகரங்களில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களை ஒரே தினத்தில் (23.3.2012) தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் துவக்கி வைத்து சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரு நகரின் முக்கிய வியாபார மையமான கமர்ஷியல் வீதியில் உள்ள கோ​ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், கர்நாடக கைத்தறி வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முகம்மது மொகிசின்  மற்றும் மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினர் ​ செயலர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் இஷிதா ராய்,  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.  மும்பை நகரில், தாதர் மேற்கு பகுதியில் வியாபார மையமாக உருவாகிவரும்   சிவாஜிபார்க் பகுதியில் உள்ள கோ​ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய துவக்க                    விழாவில் சுரேஷ் குமார் சடபதி, வருமானவரி ஆணையர், மும்பை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், கோ​ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை வியாபாரத்திற்கு உகந்த இடத்திற்கு மாற்றி அமைத்தல் மற்றும் இளைய தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் வகையில் அலங்கார அமைப்புகளுடன் நவீனப்படுத்துதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றது. 

கைத்தறி துணி இரகங்களை, தொடர்ந்து வாங்கி ஆதரவளித்து வரும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு கோ​ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைவரின் ஏகோபித்த நல் ஆதரவுடன் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் செயல்படும் காலத்தில் இந்த இரண்டு நவீன விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ஏற்றுமதி துணி இரகங்களை உள்ளூர் வாடிக்கையாளர்கள் உள்நாட்டு விலையில் வாங்கி பயன்பெறும் வகையில், கடந்த 30.11.2011 அன்று சென்னை தியாகராய நகர், பாண்டிபஜாரில் கோ​ஆப்டெக்ஸ் ஏற்றுமதி இரக விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில், பெங்களூரு நகர் மல்லேஸ்வரம் பகுதியில், குளிர்சாதன வசதியுடன் நவீன விற்பனை நிலையம் துவக்கி வைக்கப்பட்டது.  இதனைப் போலவே, ஈரோடு நேதாஜி சாலை, சென்னை அண்ணாசாலை மற்றும் எம்.எம்.டி.ஏ.காலனி, திருப்ர், ஜெய்ப்ர் இந்திரா மார்க்கெட், லக்னோ ஹசரத் கஞ்ச், ஐதராபாத் நாம்பள்ளி ஆகிய இடங்களில் விற்பனை நிலையங்கள் நடப்பாண்டில் திறக்கப்பட உள்ளன.

77 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு தரமான கைத்தறித் துணி இரகங்களை வழங்கி, இந்தியாவிலேயே கூட்டுறவு அமைப்பின் கீழ் மிகப்பெரிய விற்பனை நிறுவனமாக திகழ்ந்து வரும் கோ​ஆப்டெக்ஸ், தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago