முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தீர்மானத்தை செயல்படுத்த மாட்டோம்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 25 - ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் அதனை செயல்படுத்த இலங்கை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஜெனிவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. இது இலங்கையில் நடக்கும் சாதாரண தேர்தல் அல்ல. மிக சிறிய நாடான இலங்கையை எதிர்த்து மிகப் பெரிய நாடான அமெரிக்கா பெற்ற வாக்கு விகிதம் மிக குறைவு. எமது நாட்டில் பலர் மது விற்பனைக்கான அனுமதியை பெற்றிருந்தாலும் அவர்கள் விரும்பிய இடத்தில் கடையை திறக்க பொதுமக்கள் அனுமதிப்பதில்லை. அது போல அமெரிக்கா, ஜெனிவா தீர்மானத்தை பெற்றிருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

அன்று பிரபாகரனை உருவாக்கிய போது ஒரு உருத்திர குமாரனையும் உருவாக்கும் திட்டம்தான் இது. மிகச் சிறிய நாடான கியூபாவே அமெரிக்காவை எதிர்த்து வாழ முடியுமாயின் எங்களால் முடியாதா என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்