முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பொருட்கள்: இலங்கை புறக்கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 25 - அமெரிக்க தயாரிப்பான கோக், பெப்சி முதலிய பொருட்களை இலங்கையில் புறக்கணிப்போம் என அரசு ஆதரவுடன் சிங்கள அமைப்புகள் அறிவித்துள்ளன. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறலுக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக சிங்களர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அரசின் ஆதரவும் உண்டு. நேற்று தலைநகர் கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

முன்னதாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. அப்போது தேசிய அமைப்பு செயலாளர் பேசினார். இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தப் பார்க்கிறது. ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் அதனை இலங்கை அரசு அனுமதிக்க கூடாது. அமெரிக்காவுக்கு நாம் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமே அதன் ஆதிக்க முயற்சியை முறியடிப்போம். எனவே அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கோக் உட்பட எந்த பொருளையும் இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்