முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை அல்போன்சா முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீடு

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.25 - சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரேயுள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அல்போன்சா (32) வசிக்கிறார். இவரது நண்பர் நடிகர் வினோத்குமார். இவர் அல்போன்சா தம்பி ராபர்ட் வீட்டில் தங்கி இருந்தார். சமீபத்தில்  அல்போன்சாவுடன் தங்கி இருந்த போது ராபர்ட் வீட்டில் வினோத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

இது குறித்து நடிகர் வினோத்குமாரின் தந்தை பாண்டியன், தன்மகனை, நடிகை அல்போன்சா மற்றும் அவரது தம்பி ராபர்ட் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து விட்டதாக அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வினோத்குமார் மர்மசாவு வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக் கூடும் என்று சந்தேகிப்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அல்போன்சா மற்றும் அவரது சகோதரர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, 2 பேரின் மனுவையும் நீதிபதி பொன்.கலையரசன் தள்ளுபடி செய்தார். அதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அல்போன்சா மனு தாக்கல் செய்துள்ளார்.

தான் நடித்த சினிமா படம் சம்பந்தமாக மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தற்கொலைதான் செய்துள்ளார், அவரது சாவுக்கு நான் எந்த வகையிலும், காரணமல்ல என்று அதில் அல்போன்சா தெரிவித்துள்ளார்.

எனவே குற்றமற்ற தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அதில் அல்போன்சா கோரியிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago