முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமி மாஸ்டர்ஸ்: லியாண்டர் ஜோடி முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மியாமி, மார்ச். 25 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி யில் ஆடவருக்கான இரட்டையர் பிரி வின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ஸ்டீபானிக் ஜோடி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயண ப் போட்டிகளில் ஒன்றான மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெ ரிக்காவின் முக்கிய நகரில் நடந்து வரு கிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை 3,97,3050 அமெரிக்க டாலர்களாகும். இது குரூப் - 2 வகை போட்டி யாகும். இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்திய நட்சத்திர வீரரான லியாண்டர் பயஸ் மற்றும் ஸ்டீபானிக் ஜோ டியும், மார்கோஸ் மற்றும் சாம் இணையும் மோதின. 

இந்தப் போட்டியில் இந்திய மற்றும் செக். ஜோடி அபாரமான ஆட்டத் திற னை வெளிப்படுத்தி 6 - 2, 7 - 6 (3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடு த்த சுற்றுக்கு முன்னேறியது. 

இந்தப் போட்டியில் 7 -ம் நிலை ஜோ டியாக கணிக்கப்பட்ட இந்திய மற்றும் செக். ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பிரேக் பா யிண்டுகளை பாதுகாத்தது தான். இந்த ஜோடிக்கு கிடைத்த 7 - ல் 5 ஐ மாற்றி யது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த சுற்றில் லியாண்டர் மற்றும் ஸ்டீபானிக் ஜோடி காலின் பிளமிங் மற்றும் ராஸ் ஹட்சின்ஸ் இணையை சந்திக்க இருக்கிறது. 

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி மற் றும் ரோகன் பொபண்ணா ஜோடியும் கலந்து கொள்கிறது. இந்த ஜோடி முத ல் சுற்றில் ஜர்ஜென் மெல்ஜர் (ஆஸ்தி ரியா) மற்றும் ஜேமி முர்ரே (இங்கிலா ந்து) இணையை சந்திக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்