முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது சாதனைகளை என் நாட்டவரே முறியடிக்கட்டும்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மார்ச் 26 - தன்னுடைய சாதனைகளை இந்தியாவைச் சேர்ந்த வீரர்களே முறியடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா நாயகன் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் சதத்தில் தனது சதத்தை நிறைவு செய்தார். டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களையும் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.  சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்த சாதனையை எட்டி சச்சின், வரலாற்று சாதனை படைத்தார். இவரது பல்வேறு சாதனைகள் தற்போது விளையாடும் எந்த ஒரு கிரிக்கெட் வீரராலும் எட்ட முடியாத தொலைவுகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இதுகுறித்து பத்திரிகையாளர் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், தனது இந்த சதத்தில் சத சாதனையை எவர் எட்டுவார் என்பதை அவ்வளவு சுலபமாக கணித்து சொல்ல முடியாது.  இருந்தாலும் சாதனைகள் அனைத்தும் ஒருநாள் முறியடிக்கப்படும் என்பதையும் சச்சின் ஒத்துக்கொண்டார். அப்படி தனது இந்த சாதனை  முறியடிக்கப்படும் நேரம் வந்தால், அத்தகைய சாதனையை செய்பவர் ஒரு இந்தியராகத்தான் இருக்க வேண்டும் என்று 38 வயது நிரம்பிய சச்சின் டெண்டுல்கர் தமது விருப்பத்தை தெரிவித்தார்.  

சச்சின் டெண்டுல்கர் மேலும் தெரிவிக்கையில், என்னுடைய ஓய்வைப்பற்றி நான்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் நான் கிரிக்கெட்டில் சேரும்பொழுது யாருடைய ஆலோசனையையும் கேட்கவில்லை. என்னுடைய ஓய்வு குறித்து ஆலோசனை கூறுபவர்கள் என்னை கிரிக்கெட்டில் சேர்த்துவிடவும் இல்லை. நான் என்னுடைய திறமை மற்றும் பலத்தை என்னுடைய பயிற்சியாளர்கள் மற்றும் என்னுடைய குடும்பத்தாரிடம் இருந்து பெற்றேன். என்றைக்கு இவையெல்லாம் எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேனோ அன்றைக்கு நான் ஓய்வு குறித்து ஆலோசனை செய்வேன். புகழின் உச்சியில் இருக்கும்போதே நீ உனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அப்படி செய்வதுதான் சுயநலம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் நாம் நாட்டுக்காக ஏதாவது செய்ய முடியும்.   

வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் நாங்கள் தோற்றோம். அந்த போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியமானது. ஆனால் அதில் நாங்கள் தோற்றது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அதனால் எனது சத சாதனைகூட ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அது உள்ளபடியே எனக்கும் கவலை அளிக்கும் விஷயம்தான். அன்றைய ஒரு போட்டியை மட்டும் நான் பார்த்தவன் அல்ல. 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் பல வெற்றி தோல்விகளை பார்த்து வருகிறேன். 

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு  சொந்தக்காரரான டெண்டுல்கர் மேலும் கூறுகையில், எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக நான் கருதுவது, கிரிக்கெட் பிதாமகர் சர் டான் பிராட்மேன் அவரது உலக டெஸ்ட் அணியில் தனக்கும் ஒரு இடம் கொடுத்திருந்ததையே மிகப்பெரிய விருதாக தான் கருதுவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago