முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிறுதியில் தோல்வி - மே.இ.தீவு வீரர்கள் மீது கோச் பாய்ச்சல்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 25 - உலகக் கோப்பை காலிறுதிச் சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்ததற்கு சீனியர் வீரர்களின் பொறுப் பற்ற ஆட்டமே காரணம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் குற்றம் சாட்டி இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மே. இ.தீவு அணிகள் மோதிய முதல் கால் இறுதி ஒரு பக்கமாக இருந்தது. 175 பந்து எஞ்சி இருந்த நிலையில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் விளையாடிய மே.இ.தீவு அணி 43.3 ஓவரில் 112 ரன்னில் சுரு ண்டது. சந்தர்பால் அதிகபட்சமாக 44 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தர ப்பில், அப்ரிடி 4 விக்கெட்டும், அஜ்மல், ஹபீஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

பின்னர் ஆடிய பாகிஸ்தான் 20.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 113 ரன் எடுத்தது. மொகமது ஹபீஸ் 61 ரன்னும், கம்ரான் அக்மல் 47 ரன் னும் எடுத்தனர். ஹபீஸ் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். 

இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறியதாவது - எங்கள் சாதனை பயணத்தை அடைய இன்னும் 2 இலக்கு தான் உள்ள து. மொகாலியில் நடைபெறும் அரை இறுதியில் இதே போல மீண்டு ம் சிறப்பாக ஆட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து மே.இ.தீவு அணியி ன் பயிற்சியாளரான கிப்சன் கூறியதாவது - இந்த மோசமான ஆட்டம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 

கேப்டன் சம்மி இந்த மோசமான தோல்வியால் கடும் விரக்தியில் உள்ளார். எனவே தான் நான் உங்களை(நிருபர்) சந்திக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மே.இ.தீவு அணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

அதே நிலை தான் உள்ளது. மோசமான பேட்டிங், நம்பிக்கையின்மை ஆகியவையே தோல்விக்கு காரணம். சீனியர் வீரர்கள் சரியாக ஆடவி ல்லை. அவர்களது ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை.

டெண்டுல்கரைப் பார்த்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டு ம். சீனியர் வீரரான அவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன்களை எடுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். 

பாகிஸ்தான் அணி அடுத்ததாக அரை இறுதியில் இந்தியா அல்லது ஆஸ்திரேலிய அணியுடன் மோதலாம் என்று தெரிய வருகிறது. இந்த ஆட்டம் வருகிற 30 -ம் தேதி மொகாலியில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago