முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா நீரை திறந்துவிடுங்கள்: முதல்வர் கடிதம்

திங்கட்கிழமை, 26 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை,மார்ச்.26 - தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய கிருஷ்ணா நீரை விடக்கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரா, சென்னைக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீர் தர வேண்டும். இதில் 8 டி.எம்.சி. தண்ணீர் அக்டோபர், டிசம்பர் மாதங்களிலும் ஜனவரி,மே மாத இடைவெளியில் 4 டி.எம்.சி. தண்ணீரும் விடப்பட வேண்டும். டிசம்பர் மாதம் முடிய விடவேண்டிய 8 டி.எம்.சி.தண்ணீர் வந்து சேர்ந்தது. இந்தாண்டு ஜனவரி முதல் பெறவேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் பலமுறை நேரில் கேட்டும், கடிதம் எழுதியும் விடப்படவில்லை. கண்டலேறு பூண்டி கால்வாயில் ஆந்திர பகுதியில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே அதை சரி செய்த பிறகு தண்ணீர் விடப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்லி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஏற்கனவே தமிழகத்திற்கு தண்ணீர் அனுப்ப நீங்கள் உத்தரவிட்டதற்கு நன்றி. தற்போது கண்டலேறு அணையில் 37 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் சென்னைக்கு அனுப்ப வேண்டிய நிலுவை நீரான 4 டி.எம்.சி. தண்ணீரை அனுப்புவது உங்களுக்கு சிரமமாக இருக்காது. எனவே உடனே தண்ணீரை உரியகாலத்தில் அனுப்ப நடவடிக்கை எடுக்கவும் அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்