முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாருதி கார்களின் விலை உயர்கிறது

திங்கட்கிழமை, 26 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மார்ச் 26 - மாருதி கார்களின் விலைகள் ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட உள்ளன. நாட்டின் மிகப்பெரிய கார் கம்பெனியான மாருதி சுஸுகியின் மேலாண்மை நிர்வாக அதிகாரி (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) மயங் பரீக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பட்ஜெட்டிற்கு பிறகு தங்களது கார்களின் விலைகள் சராசரியாக 1.75 சதவீதம் உயர்த்தப்பட உள்ளன என்றார். இந்த புதிய விலைகளின்படி மாருதி 800 உள்ளிட்ட சிறு ரக கார்களின் விலைகளும், மாருதி சேடன் எஸ்எக்ஸ்4 உள்ளிட்ட நடுத்தர கார்களின் விலைகளும் உயர்த்தப்பட உள்ளன என்று அவர் கூறினார். இதன்படி அல்டோ 800 சி.சி காரின் விலைகள் ரூ. 4,200 முதல் ரூ. 5,900 வரை அதிகரிக்கும். இனி இந்த கார்களின் விலைகள் ரூ. 2.4 லட்சம் முதல் ரூ. 3.42 லட்சம் வரை விற்கப்படும். அல்டோ கே 10 மாடல் கார்களின் விலைகள் ரூ. 5500 முதல் 5,700 வரை உயர்த்தப்பட்டுள்ளன. இனி இந்த கார்களின் விலைகள் ரூ. 3.14 லட்சம் முதல் ரூ. 3.30 லட்சம் வரை இருக்கும். இன்னொரு சிறப்பான மாடலான வேகன் ஆர் கார்களின் விலைகள் ரூ. 6000 முதல் 7600 வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஸ்விப்ட் மாடல் கார்களின் விலைகள் ரூ. 7,700 முதல் ரூ. 11,900 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த கார்களின் விலைகள் இனி ரூ. 4.44 லட்சம் முதல் ரூ. 6.76 லட்சம் வரை இருக்கும். புதிய வகை ஆடம்பரக் காரான ஸ்விப்ட் டிசையர் மாடல் கார்களின் விலைகள் ரூ. 8,500 முதல் ரூ. 12,700 வரை உயர்த்தப்படுகின்றன. இனி இந்த மாடல் கார்களின் விலைகள் குறைந்தபட்சம் ரூ. 4.8 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 7.51 லட்சமாக இருக்கும். நடுத்தர ரக மாடல்களான சேடன் எஸ்எக்ஸ் 4 மாடல் கார்களின் விலைகள் ரூ. 9,400 முதல் ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்படுகின்றன. இனி இந்த மாடல் கார்களின் விலைகள் ரூ. 7.11 லட்சம் முதல் ரூ. 9.39 லட்சம் வரை இருக்கும். கார்களின் மீதான உற்பத்தி வரியை 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது 2012 - 13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் உயர்த்தியதை அடுத்து இந்த மாருதி கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக மயங் பரீக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்