முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறுவனங்கள் மின்னாக்கிளை நிறுவ மானிய உச்சவரம்பு

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.25 - சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னாக்கிளை நிறுவ மானிய உச்சவரம்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து தமிழர அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாகும். இந்நிறுவனங்கள் அதிக அளவு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துகின்றன.  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக பல்வேறு சலுகைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு அளித்து வருகிறது. 

தற்பொழுது நிலவி வரும் மின்பற்றாக்குறையிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து உற்பத்தியை பெருக்குவதற்காக அந்நிறுவனங்கள் நிறுவும் மின்னாக்கிகளுக்கு அதிக அளவு மானியம் வழங்க முதலமைச்சர்  ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.  

ஏற்கெனவே 125 ஓயஅ திறன் கொண்ட மின்னாக்கிகளை உபயோகப்படுத்தும் நிறுவனங்களுக்கு, அதன் விலையில் 25 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியமாக  அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் 125ஓயஅ திறன் கொண்ட மின்னாக்கிகள் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களின் உற்பத்தியை தொடர்வதற்கு  போதுமானதாக இல்லாத காரணத்தினால்,  320 ஓயஅ திறன் வரை கொண்ட மின்னாக்கிளை நிறுவவும், மானிய உச்சவரம்பினை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இந்த சலுகைகள் 11.11.2008 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். மேலும் இந்த சலுகையை பெற ஏற்கெனவே விண்ணப்பிக்காத நிறுவனங்களும் பயன் பெறும் வகையில் அந்நிறுவனங்கள் புதிதாக விண்ணப்பிக்க மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

அரசு அளிக்கும் இந்த சலுகை மானியத்தினால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  உயர்தர சக்தி கொண்ட மின்னாக்கிகளை நிறுவி, தங்கு தடையின்றி தங்கள் தொழிற்சாலைகளின் உற்பத்தியினை தொடருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago