முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முதல்வர் அச்சுதானந்தன் வேட்பு மனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

பாலக்காடு, மார்ச் 25 - கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று மலம்புழா தொகுதியில் பாலக்காட்டில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கேரளாவில் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஓரணியாகவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றொரு அணியாகவும் களத்தில் குதித்துள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்ற வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு இந்த தேர்தலில் டிக்கெட் கொடுக்க முதலில் தயக்கம் காட்டிய இடது கம்யூனிஸ்டு மேலிடம் பிறகு இந்த தேர்தலிலும் போட்டியிட அச்சுதானந்தனுக்கு அனுமதி  வழங்கியுள்ளது. 

அதன்படி அச்சுதானந்தன் பாலக்காடு மாவட்டம் மலம்புழா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏ.எம். பிரதீப்பிடம் அவர் நேற்று தாக்கல் செய்தார்.

அவருடன் எம்.பி.யான கிருஷ்ணதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

மலம்புழா தொகுதியில் அச்சுதானந்தன் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொகுதி இடது  கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.

இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இடது கம்யூனிஸ்டு கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்த்தாவான  அச்சுதானந்தன் கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகிறார்.

87 வயதான அச்சுதானந்தனை எதிர்த்து இந்த தொகுதியில் 46 வயது நிரம்பிய பெண் தலைவர் லத்திகா சுபாஷ் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அச்சுதானந்தன் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது காங்கிரஸ் அணியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் இவரது பிரச்சாரத்தால்தான் இடது சாரி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்