முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது ஒரு நாள்: ஆஸ்திரேலியா மே.இ.தீவை வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

செயின்ட் லூசிகா, மார்ச். 27 - மே.இ.தீவு அணிக்கு எதிராக நடந்த கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 30 ரன் வித்தியாச த்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனாகியது.  இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர்கள் வாட்ச ன் , வார்னர் மற்றும் பாரெஸ்ட் ஆகி யோர் அரை சதம் அடித்து அணி கெளர வமான ஸ்கோரை எடுக்க உதவினர். பின்பு பெளலிங்கின் போது, முன்னணிவேகப் பந்து வீச்சாளரான பிரட்லீ நன் கு பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். மெக்கே, வாட்சன், டொகெர்டி மற்றும் ஹில்பென்ஹாஸ் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக பந் து வீசினர். 

ஆஸ்திரேலியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 5 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செ யின்ட் லூசியா தீவில் நேற்று நடந்தது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற மே.இ.தீவு அணி பீல்டிங்கை தேர் வு செய்தது. ஆஸி. அணி தரப்பில் வார் னர் மற்றும் வாட்சன் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர். 

ஆஸ்திரேலிய அணி இறுதியில் நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப் பிற்கு 281 ரன்னைக் குவித்தது. அந்த அணி சார்பில், 3 வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

துவக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 61 பந்தில் 69 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் நரைன் வீசிய பந்தில் டி. பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

கேப்டன் வாட்சன் 89 பந்தில் 66 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். பாரெஸ்ட் 68 பந்தில் 53 ரன்னை எடுத்தார். இதில் 5 பவு ண்டரி அடக்கம். தவிர, மைக் ஹஸ்சே 25 ரன்னையும், வாடே 26 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி தரப்பில், ரஸ்செல் 61 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத் தார். தவிர, ரோச் 3 விக்கெட்டையும், நரைன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். 

மே.இ.தீவு அணி 282 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 251 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸி. அணி இந்தப் போட்டி யில் 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெ ற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 2 - 2 என்ற கண க்கில் சமனாகியது. 

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் ஆஸ்திரேலிய அணி முதல் மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றது. மே.இ.தீவு அணி 2 - வது மற்றும் 4 -வ து போட்டியில் வெற்றி பெற்றது. 3 - வ து போட்டி டையில் முடிந்தது. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 17 ஆண்டுகளுக்குப் பிறகு மே.இ.தீவு அணிக்கு நல்ல வாய்ப் பு கிடைத்தது. ஆனால் அதனை அந்த அணி நழுவ விட்டது. 

மே.இ.தீவு அணி தரப்பில்,கேப்டன் சம் மி அதிரடியாக ஆடி 50 பந்தில் 84 ரன் னை எடுத்தார். தவிர, பரத் 42 ரன்னையும், ரஸ்செல் 41 ரன்னையும், பொல் லார்டு 33 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸி. அணி சார்பில், பிரட்லீ 42 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மெக்கே, வாட்சன், டொகெர்டி தலா 2 விக்கெட்டும், ஹில்பென்ஹாஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் நாயகனாக சம்மியும், தொடர் நாயகனாக பொல்லார்டும் தேர் வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்