முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை விந்தியா விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 - நடிகை விந்தியா விவாகரத்து விவாகரத்துக்கோரி சென்னை குடும்ப நலகோர்ட்டில் மனு செய்துள்ளார். இது குறித்து விபரம் வருமாறு: சங்கமம் சினிமா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி . பல முன்னணி தமிழ் திரைபடங்களில் நடித்தவர் விந்தியா.

இவர் தனது கணவர் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணனை விட்டு பிரிய முடிவு செய்து சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை விந்தியாவின் கணவர் கோபாலகிருஷ்ணன் நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் ஆவார். நடிகை விந்தியாவுக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்து 6 மாதங்கள் கழிந்து இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கணவர் தன்னை தாக்கியதாகவும் அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதே போல் கோபாலகிருஷ்ணனும் தனக்கும் விந்தியாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் வழக்கு தொடர்ந்தார். இவ்விரு தனித் தனித் வழக்குகளும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கும் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் நடிகை விந்தியாவும் கோபால கிருஷ்ணனும் தாங்கள் பிரிந்து செல்ல சமரச முடிவு செய்து பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்தனர்.

இந்த மனு மீது சென்னை குடும்ப நல நீதி மன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் இன்று விசாரணை செய்ய உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்