முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. குறித்து தகவல் எதுவும் இல்லை

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வரம்,மார்ச்.27- மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒரிசா மாநிலத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மற்றும் இத்தாலியர்கள் 2 பேர்களை மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் கடத்தி சென்றுவிட்டனர். இத்தாலியர்களில் ஒருவரை தீவிரவாதிகள் விடுவித்துவிட்டனர். 

இந்தநிலையில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்தும் அவர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிஜூ ஜனதாதளம் அரசு முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று மாநில சட்டசபையில் அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது அவர் கூறுகையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா குறித்து 3 நாட்களாகியும் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றார். கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை விடுவிக்க மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கோரிக்கை எதையும் இதுவரை வைக்கவில்லை என்றும் பட்நாயக் கூறினார். கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அரசு தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் தெரிவித்துள்ள நிலையில் ஜினாவை பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்று மாவோயிஸ்ட்டு இயக்கத்தின் முக்கிய தலைவர் சப்யாசச்சி பாண்டா தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ. கடத்தப்பட்டதில் தயாநிதி என்பவர் தலைமையிலான ஸ்ரீகாகுலம்-கோரபுட் பகுதி மாவோயிஸ்ட் பிரிவு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹிகாகாவை பத்திரமாக மீட்க கடத்தல்காரர்களுடன் பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் கடத்தப்பட்ட இத்தாலியர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். மற்றொருவரை விடுவிக்க மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தலைவர்கள் பி.டி. சர்மா மற்றும் தந்த்பாணி மொஹண்டி ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இத்தாலியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் அறிக்கையை தாக்கல் செய்து மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago