முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பரில் ரஷ்ய வீராங்கனை ஷரபோவா திருமணம்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், மார்ச். 28 - ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா திருமணம் நவம்பர் மாதம் நடக்கிறது. அவர் கூடைப் பந்து வீரரை மணக்கிறார். முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளி ல் ஒருவரான மரியா ஷரபோவா ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவர் டென்னிஸ் உலகில் சில காலம் கொடி கட்டிப் பற ந்தார். கவர்ச்சிகர வீராங்கனையாகவும் திகழ்ந்தார். தற்போது மரியா அமெரிக்காவில் வசிக்கிறார். அவருக்கு நவம்பர் மாதம் 10 -ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. மணமகன் பெயர் சசா உஜாசிக். இவரும் ரஷ்ய வழி வந்தவர்தான். 

சசாவும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் சிறந்த கூடைப்பந்து வீரராக திகழ்கிறார். இருவரும் ஆகஸ்டு மாதமே திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் லண்டன் ஒலிம்பிக் மற்றும் கிராண்ட் ஸ்லாம் பட்டப் போட்டிகளி ல் ஷரபோவா பங்கேற்க இருப்பதால் இந்த திருமணம் நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்தத் திருமணம் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடக்க இருக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்