முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் குற்றம் செய்திருந்தால் தண்டியுங்கள்: அந்தோணி

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மார்ச் 28 - நான் குற்றம் செய்திருந்தால் என்னை தண்டியுங்கள் என்று ராஜ்யசபையில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார். ராணுவ வாகனங்களை கொள்முதல் செய்ய தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க சிலர் முன்வந்தனர் என்று சமீபத்தில் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதுகுறித்து பிரச்சனை எழுப்பினர். இந்த நிலையில் பாராளுமன்றத்தின் ராஜ்யசபையில் நேற்று ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். ஒரு குறிப்பிட்ட கம்பெனியிடம் இருந்து ராணுவ வாகனங்களை கொள்முதல் செய்ய தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் தர சிலர் முன்வந்தனர் என்று வி.கே.சிங் கூறியிருப்பது உண்மைதான் என்று அவர் கூறினார். ஆனால் அந்த லஞ்சத்தை வாங்க வி.கே.சிங் மறுத்துவிட்டார் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து வி.கே.சிங் தன்னிடம் கூறியதாகவும், இது தொடர்பாக எழுத்துமூலமான புகாரை தருமாறு அவருக்கு தான் ஆலோசனை கூறியதாகவும் அந்தோணி குறிப்பிட்டார். ஆனால் இந்த விஷயத்தை மேற்கொண்டு தொடர தான் விரும்பவில்லை என்று வி.கே.சிங் கூறிவிட்டதாகவும் அந்தோணி தெரிவித்தார். வி.கே.சிங்கின் பேட்டியை பத்திரிகையில் படித்த பிறகு இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடுமாறு ராணுவ செயலாளருக்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனக்கு தெரிந்தவரை நான் இந்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறேன். ஆனால் நான் தவறு செய்திருந்தால் அல்லது குற்றம் செய்திருந்தால் என்னை தண்டியுங்கள் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்