முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டங்கள் உருவாக்கும் முன் ஆலோசனை: ஹசாரே

புதன்கிழமை, 28 மார்ச் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.28 - மக்களிடம் ஆலோசனை நடத்திய பின்னரே சட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று பிரபல காந்தீயவாதியும் சமூக சேவகருமான அண்ணா ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியுடன் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தநிலையில் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் கொண்டு வரக்கோரி போராட்டம் நடத்தி வரும் அண்ணா ஹசாரே மக்களிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே பாராளுமன்றத்தில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அரசியல் சாசனப்படி பாராளுமன்றத்தில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நூறு தடவை கூறியுள்ளோம். அதோடுமட்டுமல்லாது ஒரு ஜனநாயக நாட்டில் சமுதாயத்தில் நல்ல அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனையை கேட்ட பின்னரே சட்ட வரைவை உருவாக்க வேண்டும் என்றும் ஹசாரே யோசனை கூறியுள்ளார். அதோடுமட்டுமல்லாது சட்ட வரைவை மக்கள் தெரிந்து ஆலோசனை கூறும்வகையில் இண்டர்நெட் அல்லது பத்திரிகைகள், தொலைகாட்சிகள் மூலமாக வெளியிட வேண்டும். சட்ட வரைவை மக்கள் படித்துவிட்டு மக்கள் கூறும் ஆலோசனைகளை பாராளும

ன்றத்தில் விவாதிக்க வேண்டும். கடந்த 1950-ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாகிவிட்டது. அதிலிருந்து இந்த நாட்டின் உரிமையாளர்கள் மக்கள்தான். நாட்டின் கஜானாவில் உள்ள பணம், மக்கள் பணமாகும். அந்த பணத்தில் மக்களின் கட்டுப்பாடு இல்லாததால்தான் ஊழல் அதிகரித்துவிட்டது. பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா 8 முறை தாக்கல் செய்யப்பட்டும் இன்னும் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு யார் காரணம் என்று 74 வயதாகும் ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் முதலாளிகள் மக்கள்தான். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எல்லாம் மக்களின் சேவகர்கள்தான். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் மக்கள்தான் அனுப்பி வைக்கிறார்கள். இந்த இரு சபைகளிலும் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் அது குறித்து கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும் ஹசாரே கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்