முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெனின் கருப்பனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

புதன்கிழமை, 28 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.28 - நித்யானந்தா ​ நடிகை ரஞ்சிதா வீடியோ படக்காட்சி தொடர்பான வழக்கில் லெனின் கருப்பனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திமன்றம் அனுமதி அளித்துள்ளது. நித்யானந்தாவும் , நடிகை ரஞ்சிதாவும், படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி வரை பணம் கேட்டு மிரட்டினார்கள் என்று நித்யானந்தா தரப்பில் சன் தொலைக்காட்சி சக்சேனாஉள்பட 3 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்கு பதிவு செய்து சக்சேனா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதனிடையே கடந்த 14​ம் தேதி கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரணடைந்த நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் லெனின் கருப்பனை 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப கோரி சைதாப்பேட்டை பெருநகர 11​வது நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லெனின் கருப்பனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்ததோடு வரும் 29​ம் தேதி அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago