முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங் குன்றத்தில் பங்குனி திருவிழா தொடங்கியது

புதன்கிழமை, 28 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், மார்ச். 28 - முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 8 ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி திருவிழாவாகும். அத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருவிழா தொடங்கும் வகையில் நேற்று முன்தினம் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி உள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜை ஆகியவை நடந்தன. 

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சர்வ அலங்காரமாகி தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து கொடிக்கம்பம் முன்பு சுவாமி எழுந்தருளினார்.  அங்கு கோயில் சிவாச்சார்யார்களால் பூஜைகள் முடிந்து கொடிக்கம்பத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. அதன்பின்னர் கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து மகாதூப தீபாராதனைகள் நடந்தது. திருவிழா நம்பியார் செல்லப்பா சிவாச்சார்யாருக்குபரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு தினம் காலையில் சிம்மாசனம், தங்க பல்லக்கு, சப்பரம், சிம்மாசனம், ஆகிய வாகனங்களிலும் மாலையில் தங்க மயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், பச்சை குதிரை, தங்க குதிரை ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1 ம் தேதி 5 ம் திருவிழாவை முன்னிட்டு வெள்ளி யானை வாகனத்தில் முருகப் பெருமான், தெய்வானை அம்மன் ஆகியோர் எழுந்தருள, சேவார்த்திகள் வாகனத்தை உள்ளங்கைகளில் தூக்கிக் கொண்டு ஓடும் கைபாரம் நிகழ்ச்சியும், நக்கீரர் லீலையும், ஏப்ரல் 5 ம் தேதி பங்குனி உத்திரம், ஏப்ரல் 6 ம் தேதி சூரசம்ஹாரம், ஏப்ரல் 7 ம் தேதி பட்டாபிஷேகம், ஏப்ரல் 8 ம் தேதி திருக்கல்யாணம், ஏப்ரல் 9 ம் தேதி தேரோட்டம், ஏப்ரல் 10 ம் தேதி தீர்த்த உற்சவம் ஆகிய திருவிழாக்கள் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்