முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் எதிர்ப்புக்கு இடையே டாக்கா சென்றார் சர்க்கார்

புதன்கிழமை, 28 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மார்ச் 28 - கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் நேற்று டாக்கா புறப்பட்டுச் சென்றார். 1971 ம் ஆண்டு, வங்காளதேச விடுதலைப் போரின்போது, விடுதலைப் போருக்கு ஆதரவாக செயல்பட்ட முக்கிய பிரமுகர்களை கெளரவிக்கும் வகையில் வங்காளதேச தலைநகர் டாக்காவில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வங்காளதேச விடுதலைப் போரில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறுவதற்காக அவர் நேற்று முன்தினம் அகர்தலா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா சென்றார். பிறகு கொல்கத்தாவில் இருந்து நேற்று வங்கதேச தலைநகர் டாக்கா புறப்பட்டார். மாணிக்சர்க்காருக்கும் வங்கதேச விடுதலைப் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திரிபுரா மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. வங்காளதேச விடுதலைப்போரின்போது இடதுகம்யூனிஸ்ட் கட்சி சில நிலைப்பாடுகளில் எதிர்ப்பைத்தான் காட்டியதேதவிர, ஆதரவைக் காட்டவில்லை. அப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்த மாணிக்சர்க்காரை கெளரவித்து விருது வழங்குவது பொருத்தமானது அல்ல என்று திரிபுரா எதிர்கட்சி தலைவர்(காங்கிரஸ்) ரத்தன்லால் நாத் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று முன்தினம் மாணிக் சர்க்கார் கொல்கத்தா புறப்பட்டு சென்றபோது அகர்தலா விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். மாணிக்சர்க்காரை வங்கதேச அரசு கெளரவிப்பதற்கு திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சில அரசியல்  கட்சிகள், சமூக தொண்டு நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இதேபோல திரிபுரா கல்வியாளர்களும் மாணிக் சர்க்காரை கடுமையாக விமர்சன ம் செய்துள்ளனர். இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மாணிக்சர்க்கார் நேற்று கொல்கத்தாவில் இருந்து வங்கதேச விமானம் மூலம் டாக்கா புறப்பட்டுச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்