முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட்: வாட்சன் - ஹஸ்சி அதிரடி ஆட்டம்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

செயின்ட் லூசியா, மார்ச். 29 - மே.இ.தீவு அணிக்கு எதிராக செயின்ட் லூசியா தீவில் நடைபெற்ற முதலாவ து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இத ன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் வாட்சன் மற்றும் மைக் ஹஸ்சே இருவரும் அதிர டியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, கிறி ஸ்டியன் மற்றும் பிரட்லீ இருவரும் வெகு நேர்த்தியாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வா  ட்சன் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினார். 

மே.இ.தீவு மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட 20 -க்கு 20 போட்டி நடத்த திட்ட மிடப்பட்டது. இதன் முதல் போட்டி செயின்ட் லூசியா தீவில் பகலிரவு ஆட்ட மாக நடந்தது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற மே.இ.தீவு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் சார்லஸ் மற்றும் ஸ்மித் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

மே.இ.தீவு அணி இறுதியில் நிர்ணயிக் கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பி ற்கு 150 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 1 வீரர் அரை சதம் அடித்தார். 

மே.இ.தீவு அணியின் அதிரடி வீரரான பொல்லார்டு அபாரமாக ஆடி அரை சதம் அடித்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினார். 

பொல்லார்டு 26 பந்தில் 54 ரன்னை எடு த்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். சார்லஸ் மற்றும் பானர் இருவரும் தலா 24 ரன்னை எடுத்தனர். தவிர, டி. பிராவோ 14 ரன்னையும், எம். பிராவோ 12 ரன்னையும், ஸ்மித் 10 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், முன்ன ணி பந்து வீச்சாளரான கிறிஸ்டியன் 27 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். பிரட்லீ 2 விக்கெட்டையும், வாட்சன் 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 151 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி இந்த முதல் டி - 20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற து. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கி ல் முன்னிலை பெற்று உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில், வாட்சன் 43 பந்தில் 69 ரன்னையும், மைக் ஹஸ் சே 45 பந்தில் 59 ரன்னையும் எடுத்தனர். தவிர, கேப்டன் பெய்லி 21 ரன்னை எடு த்தார். 

மே.இ.தீவு அணி தரப்பில், சன்டோகி 27 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடு த்தார். மதுரின் 33 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago