முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு நண்பர்களுக்கு வங்கதேசம் விருது

வியாழக்கிழமை, 29 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

டாக்கா,மார்ச்.29 - பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடந்த போரில் உதவி செய்த நாடுகளை சேர்ந்த முக்கிய நண்பர்களுக்கு விருதுகள் வழங்கி வங்கதேசம் அரசு கெளரவித்தது. பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும் கிழக்கு பாகிஸ்தான் என்றும் இருந்தது. இரண்டு பகுதிகளில் ஒன்று இந்தியாவுக்கு மேற்கேயும் மற்றொரு பகுதி இந்தியாவுக்கு கிழக்கேயும் அமைந்துள்ளது. மேற்கே உள்ள பாகிஸ்தானில்தான் அனைத்து அதிகாரங்கள் இருந்தன. கிழக்கு பாகிஸ்தான் வளர்ச்சியில் மேற்கு பாகிஸ்தான் அக்கறை காட்டவில்லை. மேலும் பூகோள ரீதியிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இந்த இரண்டு பகுதிகளும் அமைந்துள்ளன. அதனல் தங்களுக்கு தனி நாடு கோரி முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மக்கள் போராட்டம் நடத்தினர். ரஹ்மான் கைது செய்யப்பட்டு மேற்கு பாகிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மேற்குபாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு மக்களை ஒடுக்கினர். சுதந்திர போராட்டம் போராக உருவாகியது. இந்திய படைகள் கிழக்கு பாகிஸ்தானிற்குள் நுழைந்து கிழக்கு பாகிஸ்தானை விடுவித்தது. கிழக்கு பாகிஸ்தான் விடுதலை அடைந்த பின்னர் அதன் பெயர் வங்கதேசம் என்று மாற்றப்பட்டது. இது கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்றது. போரில் வங்கதேசத்திற்கு உதவி செய்த வெளிநாடுகளின் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று டாக்காவில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தலைநகர் டாக்காவில் உள்ள வங்கபந்து சர்வதேச மாநாடு மையத்தில் விருது வழங்கப்பட்டது. விழாவில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு மொத்தம் 83 விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை பிரதமர் ஷேக் ஹசினா வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்