முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் டெண்டுல்கர் விளையாடுவார்

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மார்ச். 30 - இந்த வருடம் நடக்க இருக்கும் ஐ.பி. எல். - 5 போட்டியில் நட்சத்திர வீரரான டெண்டுல்கர் முழுவதும் பங்கேற்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து இரு க்கிறார். பி.சி.சி.ஐ.யின் துணை அமைப்பான இந்தியன் பிரீமியர் லீக் சார்பில் 5 -வது ஆண்டுக்கான 20 -க்கு 20 போட்டி அடு த்த மாதம் துவங்க இருக்கிறது. இதில் கோப்பையைக் கைப்பற்ற மும் பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் உட்பட 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இதில் சென்னை அணி நடப்பு சாம்பிய னாகும். 

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணியில் தேசிய அளவிலான வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர்கள் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். ஐ.பி.எல். போட்டி பணம் கொழிக்கும் போட்டியாக உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கணிசமான அளவில் பணம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால் இதில் பங்கேற்க வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரரான டெண்டுல்கருக்கு தற்போது காலில் கா யம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் லண்டனில் டாக்டர்களிடம் ஆலோச னை பெற்று வருகிறார். 

எனவே சச்சின் ஐ.பி.எல். - 5 போட்டி யில் பங்கேற்பது சந்தேகம் என்று பேச் சு அடிபட்டது. ஆனால் இதனை மும் பை இந்தியன்ஸ் அணி நிர்வாகி மறுத் து இருக்கிறார். இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்ட போது, காயத்திற்காக லண்டன் சென்றுள்ள அவர் டாக்டர்களிடம் ஆலோசனையை பெற்ற பின் நாடு திரும்பியதும், ஐ.பி.எல். போட்டியில் ஆடுவார் என்று தெரிவித்தார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியி ன் கேப்டனான டெண்டுல்கர் ஐ.பி. எல். - 5 போட்டியில் முழுமையாக பங்கேற்பார். அவர் தற்போது கால் காயத்திற்காக லண்டன் டாக்டர்களிடம் ஆலோசனைக்காக சென்று இருக்கிறார். அவர் மார்ச் 31 ல் நாடு திரும்பி விடுவார். அவருக்கு ஆபரேசன் எதுவு

ம் கிடையாது என்றார் அவர். மேலும், சென்னையில் ஏப்ரல் 2-ம் தே தி நடக்க இருக்கும் ஐ.பி.எல். - 5  போட்டியின் துவக்க விழாவிலும் சச்சின் பங்கேற்பார். ஏப்ரல் 4-ம் தேதி நடக்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் மும்பை அணி சார்பில் டெண்டுல்கர் ஆடுவார் என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்கு முன்னதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்களிடம் கேட்ட போது, கால் காயத்துடன் டெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடி வருகிறார். எனவே அவருக்கு ஆபரேசன் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவர் எப்போது நாடு திரும்புவார் என்று கூற முடியாது என்று தெரிவித்தது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்